சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.04.23
ஆக்கம்-97
தவிப்பு

சின்னச் சின்னதாய் என்னுள் ஏக்கமிடும்
பென்னம் பெரிய தவிப்புகள்

ஒன்றாயிருந்த பெற்றோர் , நன்றாய்க் கூடி
மகிழ்ந்த உற்றாரை விட்டுப் பிரிந்த தவிப்பு
என்றும் கூட்டுக் குடும்பமானது கலைந்து
குலைந்து முட்டிய கண்ணீரே சேமிப்பு

அட்டை போல் ஒட்டி உதிரமதை
ஒட்டவே உறிஞ்சி முட்டி மோதும்
புதுப்புது நோயில் மூச்சுத்
திணறடிப்பு

பட்டுப் போகும் மரம் போல்
பொட்டெனச் சுட்டெரிக்கும்
மரணப் பரிதவிப்பு
தமிழனைத் தாண்டவிடாது
தூண்டித் தூண்டி துரத்திடும்
அவலப் பிழைப்பு

என்றோ ஒரு நாள் எமக்கும்
விடிவு வரும் என்ற எதிர்பார்ப்பு
அதில் ஒரு பிடிப்பு

இப் பதிப்பில் ஒளிந்திருக்கும் துடிப்பு
என் சுவாசத்தில் படக் படக்கென
அடித்திடும் மனத் தவிப்பு