வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.02.23
ஆக்கம்-261
கூலி
திருப்பித் திருப்பிக் கேட்டானே
என்ன பதில் சொல்வாயென்று
தாரமாய் வந்தவளிற்கோ
தாயாகும் பாக்கியமில்லையே
நீ சுமக்கும் என் கருவிற்குக்
கூலியே தருவேன் என்று

வயிற்றல் இடமோ காலிதான்
கொடுப்பதும் கூலிதானே
ஜாலியாயிருக்கப் பல சோலி
கற்பனையில் மிதந்தவளை
தாயாக மட்டுமே இரு போதும்
தாலியும்,தாரமும் இல்லாமலே
என்றானே

சுமைதாங்கி விக்கி விக்கி அழுதாள்
ஏனின்று கூலி ,3 ஐத் தந்த தன் கணவன்
அகப்பட்ட பூகம்பத்தில் புதைந்துதான்
போனானே

எந்தப் பணத்தில் சொந்தப் பிள்ளை வளரும்
மற்றோர் இழிவுச் சொல்லுக்கு ஆளாகாது
புறப்படாள் கருத்தாங்கியாய்
வேடந்தாங்கி.