வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.11.22
ஆக்கம்-251
முகமூடி
மனித முகமே ஒரு முகமூடி
மனதிலே சோகம் முகத்திலே புன்சிரிப்பு
இனத்திலே தாகம் எப்போது தீருமென்ற
வேகம்

என்ன தாக்கம் சொன்னால் துக்கம்
பின்னிப் பிணைந்து பென்னம்
பெரிதாய் சிதறும் பூகம்பம்
எல்லாம் தெரிந்தும் எந்த நாடும் உதவாது
கல்லுப் பிள்ளையார் போல்
குந்தியிருக்கும் வேடம்

தர்க்கம் புரிந்தவன் வாடுவது சிறையில்
சொர்க்கம் கண்டவன் நாடுவது நிறைவில்
மனிதர் கறையைக் குறைவாக்கி
கூத்தாடியாய்க் குழப்பி அடித்து

நடுவீதியில் பாடம் படித்திடினும்
திருந்தவே முடியாத மோகம்
பிடித்துப்போன தந்திரவாதி
சட்டை கழன்று எப்போதுதான்
முகமூடி கிழியுமோ.