சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.04.24
ஆக்கம்-140
ஊக்கம்

ஊக்கம் கொடுக்க வேண்டுமென
எல்லோர்க்கும் ஏக்கமே
காக்கும் கரங்கள் கை தூக்க
முயற்சி திருவினை ஆக்குமே
சாக்குப் போக்குச் சொல்லாமல்
இருப்பின் வாக்கும் பலிக்குமே

சதியோடு சுழியோடும் ஊக்கம்
மானிடரின் நிலையான உடைமை
போர்க்குமே
துதியோடு சுமக்கும் ஆக்கம்
கதியோடு துரத்தும் கடமை காக்குமே
வதியோடு வழி காட்டும் இனிமை
பூக்குமே

மதியோடு போராடும் தாக்கம்
விதியோடு தீர்வாகும் வீக்கமே
சுதியோடு ஆர்வமிடும் ஊக்கம்
பதிவோடு பலனாகப் புகழ்
சேர்க்குமே .