வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.03.24
கவி இலக்கம்-308
சின்னச் சிட்டு

பட்டு வண்ண பூஞ்சிட்டு
பாட்டுப் பாடி வீசுங் காற்றில்
பறந்தோடி படகுத் துடுப்பில்
ஏறி அடகு வைக்கும் சிட்டு

தொட்டுத் தொட்டு முட்டி
மோதும் அன்ன நடையிட்டு
பட்டி தொட்டியில் கட்டிப் –
பிடித்து ஒட்டி உறவாடும்

தட்டிப் பார்த்த சிறுவர் கையில்
பட்டும் படாமலும் அகப்படாது
தூரத் தூரப் பறந்து விளையாட்டுக்
காட்டி விரைந்தோடும்

சின்னச் சோலையில் பொட்டுப்
போல நீ போர்த்தி தென்னை
வட்டுள் ஒட்டி ஒளிந்து தட்டுப்பட
உன் அழகோ தனி அழகு

கண்ணைக் கண்ணைச் சிமிட்டி
காதோரம் கரைந்திட கரிகாலன்
கண்ணில் விதிகாலனாய்
அகப்பட்டுக் கொண்டால்
அந்தோ பரிதாபமே