வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.03.24
கவி இலக்கம்-307
விடியாத இரவொன்று

அடியாத மாடு படியாதென்றும்
முடிவிலா அரசியல் மாறாதென்றும்
துடிதுடித்து மரணிக்கும் மாந்தர்

கூழும் கஞ்சியும் குடிப்பினும்
வாழும் பொழுது நிம்மதி
குடித்துக் குடித்து மது, போதை
அடிமையாகும் சமுதாயம்

பள்ளி மாணவர் சீரழிய
படித்துப் பட்டமானவர்
வேலையின்றிப் பிழிய
பிடிக்கும் நோயுடன்
வெடிக்கும் வெட்டுக் குத்து

எப்போ சுதந்திரமென ஏங்கும்
காலைப் பொழுதில் மங்கும்
மாலைப் பொழுது

யாரைக் கடிந்து கொள்வது
வேரிலே விஷம் போரிலே
மாண்ட வேதனைக் கண்ணீர்
மிதக்கும் சோதனையில்
என்றும் விடியாத இரவொன்று .