சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.03.24
கவி இலக்கம் -137
வேலி அடைப்போம்

பாரினில் உருளும் போலி
போரினால் சூழும் சோலி
வேரினில் புரளும் பணக்
கூலி குறைவது தடுத்து
வேலி அடைப்போம்

சும்மா இருப்பினும் சுற்றிச்
சுற்றி நாற்புறமும் அலறித்
தொல்லையாகும் தொலைபேசி
அம்மா அவசர சிகிச்சை
அப்பா ஆழ்ந்த தூக்கம்

இப்ப விழுந்ததோ லொத்தரில்
ஐம்பது ரொக்கம் ரொக்கப்பரிசு
பொய் திரட்டி புரளி பிரட்டி
பாசம் கொட்டும் வேஷதாரிகள்
வெளியே வராது முட்கம்பி
வேலி அடைத்திடுவோம்

முனகும் வேதனை தீர்ந்திட
தினமும் சோதனை இனியும்
வேண்டவே வேண்டாமென்று
வேலி அடைப்போம் .