வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.02.24
கவி இலக்கம் -305
இப்போதெல்லாம்

அன்று சிந்தனையின்றி சிறகடித்துப் பறந்தோம்
சிறார்களாய் சந்து பொந்தலாம் ஆடிப் பாடினோம்
பாதைகள் நீண்டு எங்கெல்லாம் ஓடினோம்
பயணத்தில் நிம்மதி வேண்டித் தேடினோம்
இறப்பு ,பிறப்பு ,இளமை ,முதுமை துரத்தும்
என இன்று யோசனையில் வாடினோம்

அப்போதெல்லாம் வலிகள் சுமக்காது
அப்பா,அம்மாவுடன் சோலியின்றி
மகிழ சோர்விலாது கூத்தாடினோம்
பசியிருந்தும் அரைகுறை வயிறுடன்
வறுமை காட்டாது இருப்பதை உண்டு
கூட்டுக்குடும்பமாய்க் குதூகலித்தோம்

தாயகம் தந்த இனிமை வாட்டி வதைக்க
தனிமை வெந்த தாகம் விரட்டோ விரட்ட
பனியில் நொந்த நோய் திரட்டிப் பிரட்ட
பலரிலும் பதிந்த பார துக்க துயரமே
இப்போதெல்லாம் .