வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.02.24
கவி இலக்கம்-304
சாய்மனைக் கதிரை

எனக்கு வாயிருப்பின் வாயாடி
காட்டில் வெழுத்துக் கட்டி
காவலாட்களில்லாது வளர்ந்தது
அருமைக்கு அருமை

மழையில் நனைந்து வெதும்பி
அழ எங்கிருந்தோ வந்த சூரிய-
மன்னன் எனை அரணைக்க

மன்னவனே! நீ அழலாமா ?
சொன்னவனோ தென்றல் காற்று
இடியிலும் ,பெருத்த மழையிலும்
தாலாட்டிய பெருமை

இயற்கை அன்னையோடு சிணுங்கிச்
சீற்றமிட” எனக்கு ஓய்வென” கூரான
வாளால் அரிந்த கடுமை

விரட்டி அடிக்கும் இளமை, முரண்டு
பிடிக்கும் முதுமை எனும் பல்லக்கில்
சற்று ஏறி அமர சாய்மனைக் கதிரை
ஆனது இனிமையிலும் இனிமை

ஆனாலும் என் மனமோ யாரையோ
தேடி ஓடுது ,சும்மா இருப்பதை விட
காலை ,மாலை என்றில்லாது என்
வயிற்றில் சுமக்கிறேன் சுமை என
நினையாது மன நிறைவுடன்
மற்றவர் துயர் தீரும் வரை .