வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.02.23
ஆக்கம்.259
தன்னுயிரே தாய்மொழி
தன் தாய்மொழி தமிழைக் கற்க
பலருக்கு ஏனோ வெறுப்பு

அந்நிய மொழி ஆங்கிலமே உயிர் நாடியென
தொட்டதெற்கெல்லாம் இது பேசுவதைப்
பெருமையாக நினைத்தவள் தன் குழந்தைப்
பிரசவிப்பின் போது தனை மறந்து அலறினாளே
அம்மா அம்மா அம்மா என்று

தமிழ் தெரிந்து என்ன பயன் என்றும்
ஆங்கிலம் கதைக்கத் தெரியாது என்றும்
கணவன்,அவன் பெற்றோர் பிரிந்து
தனியே வாழ்ந்தவள் தன் பிழை உணர்ந்து
விக்கி விக்கி அழுது வெட்கித் தலை
குனிந்தாள்

தொலைபேசியில் தொடர்பு கொண்டு
வரவழைத்து பெற்ற மழலையைக்
கையில் கொடுத்து தமிழ் மொழிேயே
தன்னுயிர் இவள் என்றவள் வலிப்பு
வந்தபடி மன்னியுங்கள் என சொல்லி
முடிக்க முதலே அவள் உயிர்
அவளை விட்டுப் பிரிந்ததே.