வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.01.24
ஆக்கம்-300
தழும்புகள்

தொடத் தொட ஆசையோ ஆசை
சூடும் மலரில் மூடி வைச்ச அழகு
வாடும் இதழில் தொட்ட போது
குத்திய முள்ளின் வலி மாறாத்
தழும்பு

அன்னை மடி தூங்கிய குழந்தை
பசி பட்டினியால் உண்ணாத
தாயில் பால் சுரக்காத மார்பில்
கடித்த தழும்பு படித்துப் பட்டம்
பெற்றதும் சந்தோஷத் தழும்பானது

இல்லறத்தில் நல்லறம் தேடும்
கணவன் ,மனைவியில் தினந்தினம்
தேயும் இளமை முதுமை நாடத்
தேளாய்க் கொட்டிய தழும்பானது

மண்ணீரில் புதைய கண்ணீரில்
காலம் நனையத் தன்னுடனே
வந்த பொன்னுடலில் அணைத்து
இருந்த மாலையில் தொடுத்து
இணைந்த பூக்களில் எத்தனை
தழும்புகளென எண்ணி வாடியது .