வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.01.24
கவி இலக்கம் -299
பொங்கும் உளமே
தங்கும் தையே

இன்ப வெள்ளம் பொங்கிப்
பொங்க என்றுந் தங்கும்
இனிய தைப் பொங்கல்

எங்கெங்கெல்லாம் வாழும்
தமிழரில் அங்கெங்கல்லாம்
பங்கிடும் கனிவான பொங்கல்

அதிகாலை எழுந்து ஸ்நானம்
செய்து மாவால் கோலமிட்டு
மாவிலைத் தோரணமிட்டு
பானையில் மஞ்சளிலை சுற்றி

பானையிலிட்ட பால் கொதித்துப்
பொங்க பச்சை அரிசி ,சர்க்கரை
போட்ட இனிப்புப் பொங்கல்

விவசாயி விளைச்சலிட , பரந்த
சூரியக் கதிர் விரிந்து ஒளியிட
பாரினில் பொங்கும் உளமே!
தங்கும் தையே தாங்கும்
காலநிலைச் சீற்றம் தணிந்திடு .