சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.01.24
ஆக்கம் 131
பொங்கலோ பொங்கல்

தாயக அன்றைய நினைவுடன்
தரணியில் பவனி வரும்
தமிழர் இல்லமெல்லாம்
துயரந் தீரப் பொங்கிப்
பங்கிடும் பொங்கல்

மாவிலைத் தோரணமிட்டு
மாவால் அழகு கோலமிட்டு
பாலெடுத்த பானையில்
சர்க்கரைப் பொங்கல்

பூ,பழம்,பொங்கல் படைத்து
பட்டாடை உடுத்து பட்டாசு
சுட்டு ஒளித்தீப விளக்கேற்றி
பலரும் சுவைக்க இனிக்கும்
பொங்கல்

விவசாய விளைச்சல் வீச்சிட
முழுமூச்சாய் பசு பாட்டு
இசைக்கத் தொழுது அக
மலரும் பட்டிப் பொங்கல்

விழுதாய்த் தொடர்ந்து
குழவாய் இணைந்து முழங்கி
பொங்கி உண்டு மகிழும்
பொங்கலோ பொங்கல் .