சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.01.24
ஆக்கம் -129
சிரிப்பு

நீர்க்குமிழி போன்ற
நிலை அற்ற வாழ்வு
குலையாதிருக்க கூடி
முகம் மலர்ந்திடு

வேரோடும் சந்ததி பல
சீரோடும் சிறப்போடும்
சந்தோஷமாக வாழ
சிரித்து மகிழ்ந்திடு

முகங் கடுகடுக்க
முறைச்ச மூக்குடன்
விறைச்ச நரிச்
சிரிப்பின்றி மனதார
நிறைத்திடு

குறும்போடு குதூகலித்து
நறு மனத்தோடு நாலு
பேரில் கவர்ந்து இதமாகப்
பதமாகச் சுவைத்துச்
சிரித்திடு

மெய் எனும் உடம்பில் பொய்
ஊற்றி வளரும் மாந்தர் நோய்
விட்டுப் போக வாய் விட்டுச்
சிரித்து ஆரோக்கியமாக்கிடு .