சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.12.23
ஆக்கம் -127
காதல்

அன்பே என் ஆரமுதே !
உன்னை எண்ணுகையில்
ஊமைக் கவி கொட்டுது

கண்ணே அதை எழுத
நினைக்கையில் அழுத
கண்ணீர் முட்டுது

பாமுடன் நீர் இறைத்து
நேசமுடன் பூ போட்டது
தப்பான வேஷமாயிட்டுது

ஆனால் எனது காதலோ
மெய்யானது
உனது மோதலோ என்றும்
பொய்யானது

ஆதலால் என் உயிர் உள்ளவரை
எனைப் பார்த்த உன் விழிகளிற்காக
என்றென்றும் காத்திருப்பேனே .