07.12.23
ஆக்கம் -294
மனிதத்தின் நேயமே
மனிதத்தின் நேயம் மறைந்து
மாயமாய்ப் போனதே
இனத்துக்குள் இருந்த சம
ஒற்றுமை குலைந்து விட்டதே
அன்பு,ஆதரவு,கனிவு தேய்ந்து
ஆணவ அதிகாரம் கொட்டுதே
கத்தி,கோடரி,ஆயுதம் பாய்ந்து
உதிரம் கொப்பளித்துச் சீறுதே
சமத்துவம் சாமத்தியமோடு சுய
நலமாய்த் தப்பித்துக் கொண்டதே
தலைவிரித்தாடும் போதை சூழ
மனித உரிமை எது ?எனக் கேட்டதே
கருத்து சுதந்திரங்கள் காணாமல்
போயிட பெருத்த அரசின் ஆட்சியில்
போட்ட சட்டம் ,நீதி மனித உரிமை
இன்றி மீறி மீறிப் போனதே .