வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

31.08.23
ஆக்கம்-281
விழித்தெழு

எழும்போது நீ விழுகிறாய்
விழும்போது எழுகிறாய்

நினைவோடு கனவுகள்
காண்பது வழமையே

கண்டவை சில நிஜமாகின்றது
பல கிடைக்காது போகின்றது
விழுபவனைத் தூக்கி நிறுத்த
கை கொடுக்க மறுப்பவன்

விழுந்து விழுந்து சிரிக்கிறான்
கிறுக்குப் பிடித்தவன் போல

வந்தவை, வராதவை சமாளிக்க
படாதபாடுபட்டு வேடிக்கை
காட்டும் வினோதம்

வயிறு முட்ட உண்டவன்
செரிப்பதற்கு அடுத்தவனில்
காட்டும் குழப்பம் கூத்தாட

விழித்தெழு மனிதா வீரமுடன்
அறிவொளியூட்ட
புதுப்பொலிவோடு புத்துயிரோடு
பூத்துக் குலுங்கிடு

மன மகிழ்வோடு மனந் திறந்து
முன்னின்று காணும் கனவுகள்
சீர்தூக்கி நிறுத்திடு .