வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.08.23
கவி இலக்கம்-279
குறிக்கோள்

அலையோடு பிறவாத கடலில்லை
உலையோடு கொதியாத சாதமில்லை
உடலோடு தொடராத நிழலில்லை

குறிக்கோள் இல்லாத வாழ்வு
கூனிக்குறுகி வெடித்துச் சிதறி
சீரழிந்து விடுமே

அறிவுக்கேற்ப புத்திசாலித்தனம்
மூளையிலிருந்து பறித்தெடு
செறிந்த வாசம் மலர்ந்திடுமே

சென்று சேருமிடம் வரையறு
பயணம் தொடர்ந்து நடைபோடுமே

என் கடமை என்னவென்று புரிந்திடு
தன்னாலே உடைமை,உரிமை
வந்திடுமே

தீயதை விட்டு நல்லது செய்ய
அதர்மம் நீங்கி தர்மம் ஓங்க
நன்னெறி நாட்ட வெற்றி
பெற்றிடுமே

நம் நாட்டுக்கு என்ன தேவை
சிந்தித்து சிறகை விரித்திட
எம்மால் முடிந்தது செய்து
மனம் நிறைத்திடுவோமே .