வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.01.23
ஆக்கம்-257
பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது

பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேதும்
உண்டா இல்லையா இவ் வினாவிற்கு விடை
காணாது விழி பிதுங்கும் நேரம்

கொடிய வைரசும் தேடிய போர் அனர்த்தமும்
பொருளாதார வீழ்ச்சியில் வேலையில்லாத்
திண்டாட்டம்
விலை உயர்வால் பசி பட்டினி அகோரத்
தாண்டவம்
இறப்பு விகிதம் கூட பிறப்பு விகிதம் குறைய
போசாக்கு இன்மையால் கொண்டதே கோலம்

குண்டு வீச்சு எறிகணையால் விவசாய நிலமதில்
பயிர்ச் செய்கை பாழாய்ப் போனதும் பெருகிடும்
விளைச்சல் தடையானதே
பட்டினியால் உலக நாடுகள் பலவும் படும்பாடு
கொட்டித் தீரா வேதனையில் முட்டி அழும்
கண்ணீரே வலிமையுடன் பெருகிடுதே.