வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.06.23
கவி இலக்கம்-274
அகதி நாம் பெற்ற வரமா

வாழ்வில் சந்தித்த அநியாயங்கள்
தட்டிக் கேட்ட போராளி
பயங்கரவாதியா

சில கொடும்பாவி எட்டப்பனால்
கட்டுக் குலைந்து நச்சுப்பாம்புகளை
ஏவி எரிந்து சாம்பலானதே

பல இலட்சியம் பூண்ட கரு
கொதிக்கும் தீப்பிழம்பில்
மாட்டிக் கொண்டதே

நம் வீரத் தியாகிகள் எம்
விடுதலைக்காகப் போராடி
வலையில் சிக்கி மாண்டாரே

உயரப் பறப்பவனால் ஆபத்தென
இழுத்து விழுத்தி அழித்தது
வரலாற்றுப் பதிவே

அகதி நாம் பெற்ற வரமல்லவே
நம் நாடும்,அந்நிய நாடும்
சேர்ந்த கூட்டுச் சதியே

இன்று தமிழன் மட்டுமல்ல அகதி
ஒட்டுமொத்த இலங்கைக்
குடிமகனும் அகதியே அகதியே .