சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.01.23
ஆக்கம்-89
புதிர்
புதருக்குள் ஒழிந்த புதிரான புதிர்
புரியாத புதிராய் வாழ்வில் பல
வினாவிற்கு விடை தெரிந்தும்
தெரியாததாய் பல கஷ்டங்களில்
மரணத்துக்குட்படுதே

வளரும் வயதிற்கேற்ப அனுபவ
பாடங்கள் பக்கம் பக்கமாய்
பல ரணங்களாகுதே

குழந்தை பிறந்து வளரும் பருவமதில்
பெற்றோர் விட்டுக் கொடுப்பு
அதிகமானதே
வாலிபம் எட்டியதும் வளமைக்கு மாறான
எதிரும் புதிருமான பதிலில் இளம்
சமுதாயத்திற்கும் பெற்றோருக்குமுள்ள
இடைவெள் நீளமாகுதே

திருமண வயது குட்டியதும் வேணடாத
வினைகள் முட்டி கொண்டதே கோலமென
தீய பழக்கம் புகுந்த வாழ்வோ புரியாத
புதிராக மனதில் கனக்கின்றதே