சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.11.22
ஆக்கம்-83
என்றும் பணி தொடர வாழ்கவே
உள்ளம் உவகையுடன் ஊக்கம் ஊட்டியது
கள்ளமிலாத் துள்ளலுடன் ஆக்கம் எட்டியது
கொள்ளை கொள்ளும் கவியுடன் பொங்கி
முட்டியது

மெல்லென உயர்ந்து சில்லெனப் பூத்த
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்
நூறு தர இரண்டென இன்றைய
நிகழ்வு இருநூறில் கை கொட்டியதே

புலம் பெயர் வாழ்வில் பலம் தந்த
நடா,வாணி மோகன் இவர்களையும்
சுட்டிக்காட்டித் தட்டிக் கொடுக்கும்
பாவையரையும் பாலமிட்ட பாமுக
உறவுகள் உளமாற வாழ்த்திடுவோமே
என்றும் பணி தொடர வாழ்க வாழ்கவே.