சந்தம் சிந்தும் கவிதை

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்னபள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தும் கவி இலக்கம் :29

கவிதை தலைப்பு : உலக சொந்தங்களுக்கு ஓர் அகதியின் கோரிக்கை மடல்.

வானெங்கும் பூத்திருக்கும் நட்சத்திரமே !
உலகெங்கும் வாழ்ந்திருக்கும் உயிர் சொந்தமே !

அகதியாய் இடம் பெயர்ந்திருக்கும் மூன்றாம் தலைமுறையின்
முத்திரை பதித்த அகதி நான்!

கடந்த காலம் காணாமல் போனது!
நிகழ்காலம் இருண்டு போனது !

நாட்டையும் வீட்டையும் மறந்து! உரிமையும் உறவையும் பிரிந்து!
முப்பது ஆண்டு ஓட்டுரிமை இழந்து!
ஒடுக்கப்படும் ஓடும் அகதியின் கோரிக்கை மடல் இது!

கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும்
கூலி வேலை செய்து
உடல் வலி உயிர் போக!
மது அருந்தி மாண்டுபோகும் தந்தையரை மீட்கவே !
தாயின் தாலிக் காக்கவே! கோரிக்கை மடல் இது!

சாதிக்கும் இளைஞரின் துடிப்பை அகதி சான்றால் அடக்க!
எட்டாக்கனி மருத்துவ படிப்பு !தொடமுடியாத சட்டப்படிப்பு !

கல்வியால் களையெடுக்க அதிகாரமும் ஆளுமையும் தடுக்க !முடங்கி மூலையில் கிடக்கும் !அகதியின் கோரிக்கை மடல் இது!

ஓ! உலக சொந்தங்களே
ஒரு நாட்டில் ஐந்து ஆண்டு குடியிருந்தால் அந்நாட்டு பிரதி!

முப்பது ஆண்டு முடிந்தும்
மத்திய அரசின் பதிலோ
சட்டவிரோதி !

பத்துக்கு பத்து வீட்டில்! படித்ததெல்லாம் வெற்று ஏட்டில் !

சட்டம் மாறவே! எம்சந்ததி வாழவே!
ஓர்! அகதியின் கோரிக்கை மடல் இது!

நன்றி! வணக்கம்!