சந்தம் சிந்தும் கவிதை

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்னபள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தம் சந்திப்பு இலக்கம்:28 கவி தலைப்பு: அறுந்து கிடக்கும் தொப்புள்கொடி உறவுகள்
நாள்: 01.02.22

மடிந்து போன மக்களும் தொலைந்து போன
சொந்தங்களும்

மறந்து போன மண்ணையும் அழிந்து போன உறவையும் என்றும் நெஞ்சம் மறப்பதில்லை !

யுத்த களத்தில் ரத்தம் சிந்திய மாவீரன் மரணம் ஓய்ந்தது!

மானம் காக்க மங்கை கத்திய கதறல் அம்பாக பாய்ந்தது!

ஓயாத கடல் அலைபோல்
விட்டு வந்த தொப்புள் கொடி சொந்தம் !
வீதியில் வீசி விதையாய் முளைத்து நிற்க!

கட்டித்தழுவ முடியாமல் !
கடல் கடக்கத் தெரியாமல்_ எங்கள் இரவுகள் இன்னும் விடியாமல்!
காத்திருக்கும் தொப்புள்கொடி உறவுகள்!

நன்றி! வணக்கம்!