சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 27
கவித் தலைப்பு : பரவசம்
நாள்: 25.01.2022
நினைவுகள் நீந்தும்
நித்தம் ஒரு கவி பாடும்
எண்ண அலைகள் எழுதுகோலால்
ஏட்டில் அச்சிட
ஏற்றம் பெரும் கவியால்
மாற்றம் தரும் மனதில்
உருவாகும் ஊற்றே பரவசமே!
கவி எழுதும் திறனை
கவனமாக வடித்து
பமுகத்தில் நயத்துடன் நனி பாடி
பாராட்டும் குணம்
தினம் என்னில் பரவசமே !
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உமையோடு உருவேற்றி
கருகாக்கும் கலை
கேட்போரை ஆனந்தத்தில் ஆழ்த்தும்
பாமுக கவி பூக்களில்
பூத்திருக்கும் மலர்களை பார்த்தாலே பரவசமே!
பார் போற்ற நான் உயர
வேர் முளைத்த வெள்ளி மலர்கள் உதிராமல் உலக அறிந்தால் பரவசமே!
நன்றி ! வணக்கம்!