சந்தம் சிந்தும் கவிதை

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தும் கவி இலக்கம்:26 கவி தலைப்பு :பாமுக பூக்கள்
நாள்: 18.01.22

உதிரா பூக்களை
பக்குவமாய் பறித்து
பலரது உணர்வுகளை தினித்து
பாமுக பூக்களாக சேர்த்து
தமிழ் மொழி என்னும் நூலில் கோர்த்து

தரமான வாசிப்பில் தாகமாக மாற்றி
கவி உணர்வை ஊற்றி
காவியம் போற்ற

காலத்தால் அழியாமல் இருக்க
நூல் வெளியீடு செய்து
நூற்றாண்டு காண வைக்கும்
வாசனைப் பூக்களே !
என்றும் வாடாத மலர்களே !

பாமுக பூக்களால்
உலகெங்கும் வாசம் வீச வாழ்த்துகிறேன்!
வான் உள்ளவரை வாசம் வீசட்டும்!

நன்றி வணக்கம்!.