சந்தம் சிந்தும் கவிதை

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.கவிதை.

சந்தம் சிந்தும் கவி இலக்கம் :25 கவிதை தலைப்பு : வாழ்க்கை

கொஞ்ச காலம் தஞ்சமடைய பூமியில் கற்றது

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை!

சிறுவயதில் சிந்திக்க வில்லை! மகிழ்வுக்கு குறைவே இல்லை!

இனிப்பான பயணம்
சிறப்பாக இருக்க!

நடுவயதில் நாலும் புரிய
ஏற்ற இறக்கத்தை எட்டிப்பிடிக்க எல்லோராலும் முடியாது என உணர்ந்தேன்!

துயர்துடைக்க துணையின்றி கடவுளுக்கு கண்ணீரை காணிக்கையாக்கி

பொறுமையைக் கடைபிடித்து போன போக்கில் போக

முதுமை காலம் முட்டியது
மலரும் நினைவுகளோடு

மனதை ஆளும் திறனை கண்டு எதுவும் நிரந்தரமில்லை
என உணர்ந்தேன்!

நன்றி வணக்கம்