சந்தம் சிந்தும் கவிதை

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சத்தம் சிந்தும் கவி இலக்கம் : 24
கவி தலைப்பு :இலக்கு

நம் இலக்கை அடைவது இலகுவான செயலல்ல!

காலத்தை வெல்ல
தூக்கத்தை குறை!

முயற்சியோடு பயிற்சியை மூலதனமாக போடு!
தினம் தினம் போராடு!

போகும் பாதையில் முட்களும் கற்களும் நிறைந்திருக்கும் பார்வையால் அதை எரித்து விடு!

பெண்களின் லட்சியத்திற்கு பேராபத்தே !
கயவர்களின் கண்களே!

உன் கூர்மையான நகங்களால் அதைக் கொய்து விடு!

வரலாற்றில் பெயர்
பொறித்தவர்கள் எல்லாம்

கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சந்தித்தவர்களே!

நம் இலக்கை அடைய
அயராது உழைக்க வேண்டும்!

நன்றி வணக்கம்!