சந்தம் சிந்தும் கவிதை

ரஞ்சிதா கலையரசன்

“பட்டினி”
பட்டினியில் வாடி
படை படையாய் திரண்டோடி
கிட்ட விழுந்து அதிரும்
குபீ் ர் குண்டால் உடல் சிதறி
செத்தவரை புதைக்க
நிறுகுழிக்குள் மூடி விட்டு
வெட்ட வெளி வெள்ளம்
சகதி கும் இருட்டு
பட்ட பாடு சொல்ல
பாட்டு வரி போதாதே.
பாலுக்கு அழும் சிசுவும்
பட்டினியில்அழுவோரும்
கால் போன போக்கில்
கடல் அலை போல் சனக்கூட்டம்
ஆள் பிடிக்க வருபவர்க்கு
அஞ்சி இளம் பொடி பெண்ணை
நாள் எல்லாம் ஒளித்து வைக்க
நுடுங்கி பயந்திருந்து
மலம் கழிக்க பகல் பொழுது
மறையும்வரை காத்திருந்த
இன அழிப்பு போரின்
இறுதி துயர் கட்டம்
முள்ளி வாய்க்காலில
முடங்கி நின்ற காலத்தை
உள்ளம் மறவாது
உலுக்கும் நினைவலைகள்