வியாழன் கவிதை

ரஜிதா அரிச்சந்திரன்

பச்சோந்தி.
பாலுக்கும் காவல் பதுங்குகின்ற பூனைக்கும்
ஞாலத்தில் நண்பனாகி நாலுபணம் சேர்க்கத்தான்
பாம்புபோல் தோலுரித்துப் பாரில் தினந்தோறும்
தாம்பல வர்ணம்காட் டும்

அற்பர் இனம்மதம் அன்பென்றே நாளலெ்லாம்
சொற்போர் நடத்துவார் சொர்க்கம் நரகம்
என்பார் முழுவதும் ஆவிதானே அகதிக்கு
நித்தம் எல்லாம்என் பார்

நிறையில்லார் தத்தளிப்பார் நிலையுமில்லா மாந்தர்
நிறையும ழிந்தினிமை யானநித்தி லத்தில்
கறையாக வாழ்வார் கருங்காலி போல்
மறைந்திருப் பார்பா ரிலே..!

-கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்