“ விஞ்சிடும்விஞ்ஞானம் தந்திடுமாஅமைதி?கவி..ரஜனி அன்ரன்(B.A) 10.11.2022
அண்டவெளியினில் ஆயிரம் அதிசயங்கள்
அதிசயத்தைக் கண்டு கொண்டு
அகிலத்தை ஆட்சி செய்யுது விஞ்ஞானம்
விஞ்ஞானத்தின் விந்தைகளோ பலகோடி
விபரீத விளைவுகளும் இங்கே பலநூறு
விந்தைக்கும் விபரீதத்திற்கும் இடையே
சிந்தை தடுமாறுது நம்வாழ்வு !
கையுக்குள்ளே உலகம் இப்போ
கணணி மயமானதே அத்தனையும்
கண்டுபிடிப்புக்கள் உபகரணங்கள்
கற்றலில் கற்பித்தலில் புதிய மாற்றங்கள்
மருத்துவத் துறையினில் மாபெரும் வெற்றி
மனித வாழ்வினை இலகுவாக்கி
மகத்துவம் கண்டது விஞ்ஞானம் !
விந்தையாக ஒருபுறமும் பேரழிவாக மறுபுறமும்
உலகினைத் திடுக்கிட வைக்குது விஞ்ஞானம்
அணுவாயுதங்கள் வல்லமையைப் பறைசாற்ற
வல்லரசு நாடுகள் போரினைத் தொடர
அழிவுப் பாதையில் அமைதியும் குன்றிட
மனிதமனங்களும் அழுத்தமாக சூழலும் அழுக்காக
மனித குலத்திற்கு சவாலாகுதே விஞ்ஞானம் !