வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ காற்றின்வழி மொழியாகி வாழ்வு தந்தாய் “…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 15.02.2024

ஒற்றை மனிதனின் உருவாக்கம்
மாற்றான் தேசமதில்
காற்றலையாகி காற்றின் வழி மொழியாகி
தேம்ஸ்நதிக் காற்றோடு கலந்து
தேசமெல்லாம் தமிழ்மணம் பரப்புதே !

காற்றின் மொழியாகி காதோரம் வந்து
ஊற்றாகி உறவாகி உறுதுணையுமாகி
விழியாகி ஒளியாகி விடியல் தந்தாய்
உள்ளம் கவர்ந்தாய் இல்லம் தேடி வந்தாய்
வளம் தந்தாய் மொழியாகி வாழ்வும் தந்தாய்
கவிக்களமும் தந்தாய் கவி படைக்க !

வானொலி தேன் ஒலியாகி
தேசமெல்லாம் ஒலிக்குது
தேடலுக்கு வலுச்சேர்த்து
பெருக்கியது ஆற்றலை – உன்
படைப்புக்களும் தொகுப்புக்களும் ஏராளம்
பயன் பெற்றவரும் தாராளம்
தொழில் நுட்பத்திலும் அதிவேகம்
தொட்டு விட்டாய் இலக்கின் உச்சம் !

மார்க்கோனியின் மகத்தான கண்டுபிடிப்பு
ஹார்மோன்களுக்கு எல்லாம் மருந்தாச்சு
தனிமையைப் போக்கி தைரியத்தைத் தந்த
காற்றின் மொழியே காதலின் சுகமே – நீ
ஆற்றும் சேவையோ அளப்பெரிது
உனை வாழ்த்திட வார்த்தைகள் இல்லை
என்றும் வாழ்க பல்லாண்டு வளமோடு நீ !