“ பொங்கும் உளமே தங்கும் தையே “கவி…ரஜனி அன்ரன் (B.A) 18.01.2024
தைமகளே பொன்மகளே
தமிழ்த்தாயின் மூத்த தலைமகளே
தரணி புகழ் கொண்டவளே
தைக்கு தை தவறாமல் வந்து
சிந்தை கவரும் சின்னவளே
பொங்குதே உள்ளம் உனைக் கண்ட மகிழ்விலே !
உள்ளம் பொங்க உவகை பொங்க
உணர்வுகளும் பொங்கியெழ
மங்களம் எங்கும் மகிழ்வாய் பொங்க
தங்கும் தையே தைரியத் தையே
பொங்கி எழுந்திடு புதுமையைத் தந்திடு
பொங்கு தமிழாகப் பொங்கி எழுந்திடு !
தைமகள் பிறந்துவிட
தைரியமும் கிட்டிவிட
புதுவழியும் கிடைத்துவிட
தங்கு தடையின்றி
எங்கும் சமரசம் மலர்ந்திட
புதுமைகள் எங்கும் பூத்திட
எண்ணங்கள் வண்ணங்களாய்
உள்ளம் பொங்கி வழியட்டும் !