வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

கடந்து வந்த பாதையிலே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 21.12.2023

பாதைகளும் பயணங்களும்
படிப்பினையைத் தந்துவிட
கடந்து வந்த பாதைகளோ
கதைகள் பல கூறி நிற்க
வாழ்வினையே செப்பனிட்டு
வரலாற்றைப் புடமிட்டு
வெற்றிப் பாதைக்கும் வழி வகுத்திடுமே !

இலக்கினை நோக்கிய
இலட்சியப் பயணமாய்
கடந்து வந்த பாதைகள்
புடம் போட்டுக் காட்டுதே
விரியாத பக்கங்களை
விரைந்துமே புரட்டிவிட
தெரியாத பாதையிலே
புரியாத பயணமே வாழ்க்கை !

௧டந்து வந்த பாதைகளில்
கல்லுகளும் முள்ளுகளும்
இடர்களுமோ ஏராளம்
தடைகளைத் தாண்டியே
பாதைகளில் பயணிக்க
திருப்பங்களும் திருத்தங்களும்
திருத்தி விடுமே வாழ்வுதனை !