வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

தீர்வினைத் தருமா தற்கொலைகள் ?…..கவி….ரஜனி அன்ரன்(B.A) 14.09.2023

ஒட்டுமொத்த உலகினையும்
அச்சொட்டாய் ஆட்டிப் படைக்குது
தற்கொலை முடிவுகள்
ஒருவரின் சுயவிருப்பின் பேரில்
நொடிப்பொழுதில் எடுக்கும் விபரீதமே தற்கொலை
தற்கொலையை அறவே தவிர்க்க
ஆண்டு தோறும் செப்டெம்பர் பத்தாம் நாளை
தற்கொலைத் தவிர்ப்பு நாளாக்கியதே ஐ.நா.மன்றும் !

தோல்வி ஏமாற்றம் விரக்தி
தனிமை அச்சம் மனஅழுத்தமென
தற்கொலைக்கு காரணங்கள் பலவாக
உலகில் ஒரு வருடத்தில்
எட்டுலட்சம் தற்கொலைகள் அரங்கேறுதே !

கனவுகளைப் புதைத்து கடமைகளை மறந்து
எதிர்காலத்தை உதறித் தள்ளி
குடும்ப உறவுகளைத் தவிக்கவிட்டு
குறுகிய நொடியில் வெறுப்போடு எடுக்கும் முடிவு
தீர்வினைத் தான் தருமா ?
அமைதியான வாழ்வில் சூறாவளி வீசும் போது
தற்கொலையை நாடுகிறது மனங்கள்
தவிர்ப்போம் தற்கொலையை
கொடுப்போம் உசாத்துணையை !