வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ உழைப்பு “….கவி….ரஜனி அன்ரன்(B.A) 04.05.2023

உழைப்பின் வாசமே
உழைப்பாளிகளின் சுவாசம்
உடலை இயந்திரமாக்கி
உழைப்பை உரமாக்கி
உழைக்கும் வர்க்கமே
உன்னதமான உழைப்பாளிகள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உழைப்பாளிகளின் கடின உழைப்பே உறுதுணை !

உடலும் மனமும் வலுவடைய
மனிதனைப் பண்படுத்துவது உழைப்பு
தன்னம்பிக்கை உணர்வை ஊட்டி
சாதனைத் தடத்தினை எட்டிப்பிடிக்க
அச்சாரமானது உழைப்பு
வாழ்விற்கான அழைப்பே உழைப்பு !

இயற்கை கூட கற்றுத் தருகுது
உழைப்பு எனும் பாடத்தை
உதயசூரியன் உதித்தால் தான் வெளிச்சம்
வியர்வை சிந்தி உழைத்தால் தான்
விரைவில் கிட்டும் வெற்றிக்கனி
உழைப்பே உயர்விற்கு வழி
உழைப்பே நல்வாழ்விற்கு விழி !
https://www.youtube.com/watch?v=y-91pU0eNN0