வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ அதனிலும் அரிதே “……..கவி……ரஜனி அன்ரன் (B.A) 07.04.2022

மாந்தர் பிறப்பு மண்ணிற்கு அரிது
வேந்தன் ஆட்சி வையகத்திற்கு அழகு
சுகநல வாழ்வே நீடு வாழ்விற்கு மெருகு
நிலையில்லா நீர்க்குமிழி வாழ்வில்
விலை மதிப்பில்லா மானிட உயிர்கள்
தொற்றின்றி வாழ்தல் அதனிலும் அரிதே !

சுற்றுச் சூழலைச் சுத்தம் செய்து
சுகாதாரம் தனைக் காத்து
சுத்தக் காற்றைச் சுவாசித்து
ஊட்டம் நிறைந்த உணவினை உண்டு
நாட்டத்தோடு நன்னீரை நன்றாய் அருந்தி
வாட்டம் போக்க உடற்பயிற்சி செய்து
காட்டமாக ஆரோக்கியம் பேணினால்
தேட்டமாக வாழலாம் தெம்போடு !

இயற்கையோடு இசைந்து வாழ்ந்து
வாழ்ந்த வாழ்விற்கு சான்றாகி
வாழ்வியலை வண்ணமாக்கி
வாழ்வோம் நோயின்றி வளத்தோடு
அதனிலும் ஆரோக்கிய வாழ்வோடு
உலக சுகாதார நாளே – எம்
வாழ்வாதாரத்தின் ஜீவாதார நாள் !