“ உன்னதமே….உன்னதமாய் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.03.2022
இயல்பில் பண்பில் மேன்மையானது உன்னதம்
உயிருக்குள் உயிரைச் சுமப்பதும் உன்னதம்
உன்னதமே இங்கு உன்னதராய்
உன்னத பெண்கள் எழிற்சியாய்
உலகே விழிக்கும் உன்னத தினமாய்
பங்குனி எட்டினைப் பறைசாற்றுதே !
பெண்ணின்றிப் பிரபஞ்சமில்லை
பெண்ணின்றிப் பேறொன்றுமில்லை
பெண்ணிருக்கும் இடமோ இனிய நந்தவனம்
பெண்ணில்லா ஊரோ கொடிய காண்டாவனம்
பெண்ணவளின் பெருமைதனை
கண்குளிரக் காணலாமே வியந்து !
பன்முக வித்தகியாய் படைப்பின் சக்தியாய்
தன்னிகரில்லாத் தாரகையாய் தன்னம்பிக்கை வேராய்
பொறுமைக்கு பெருமை சேர்ப்பாள் உன்னதப்பெண்
அலுவலகம் தொட்டு ஆட்சி வரை
விளையாட்டுத் தொட்டு விண்வெளி வரை
அத்தனை துறைகளிலும் ஆழுமை பெற்று
ஆணுக்கு நிகராக அனுதினமும் உழைக்கும்
உன்னதரின் உன்னதத்தை போற்றிடுவோம் எந்நாளும் !