வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ தமிழின் பெருமை “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.02.2022

தமிழின் பெருமை தமிழர்க்கு மகிமை
எத்தனை மொழிகள் உலகில் இருந்தாலும்
அத்தனையிலும் தனித்தன்மை கொண்ட மொழி
மொழிகளிலே மூத்த மொழி
மனதிற்கு இனிய மொழி
மதுரம் நிறைந்த மொழி
மகிமை மிக்கமொழி தமிழ்மொழியே !

அணிகலன்களை தமிழுக்கு அணியாக்கி
ஐம்பெரும் காப்பியங்களைத் தந்து
உலா கோவை பதிகம் அந்தாதியென
சிற்றிலக்கியங்களைச் சிங்காரமாய் தந்து
பாவலர்கள் பலரையும் பாங்காகத் தந்து
தமிழர்க்கு பெருமை சேர்த்த மொழி தமிழே !

எல்லை வகுத்த மொழி
எல்லையில்லாப் பெருமை கொண்ட மொழி
வாழ்வினை அகம் புறமெனப் பிரித்த மொழி
வாழ்வியல் இலக்கியம் தந்த மொழி
மொழியின் வளமை குடியின் தொன்மையென
தனித்தன்மை வாய்ந்த மொழி
வரலாற்றுப் பெருமையோடு செம்மொழியாகி
வரலாறாய் வாழும் மொழி வண்ணத் தமிழ்மொழியே !