வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ மாற்றத்தின் திறவுகோல் “….கவி,….ரஜனி அன்ரன்…..(B.A) 06.01.2022

காலத்தின் சுழற்சியில் கடுகதி வாழ்வினில்
மாற்றமொன்று வேண்டுமே அவசியம்
மாற்றமென்பது உலகியல் நியதி
மனிதன் மாறாவிட்டால் வாழ்வே இல்லை
மாற்றமென்ற சொல் மட்டும் மாறாதிருக்க
மாற்றங்கள் பலவாக அரங்கேறுது உலகினிலே
மாற்றங்கள் பலதையும் செய்திடுவோம்
மாற்றத்தின் திறவுகோலாய் மாறட்டும் புதிய ஆண்டும் !

வாழ்க்கையைச் சவாலாக்க சாதனைகளை நிலைநாட்ட
தேடல்களைத் தெளிவாக்க வேண்டுமே மாற்றம்
மாற்றத்தின் திறவுகோலாய் ஏற்றத்தின் படிகளாய்
மாற்றியமைப்போம் படைப்புக்களை
மாற்றம் ஒரு சகாப்தமென ஏற்றிடுவோம் ஒளியினை !

தட்ப வெப்பம் காலநிலை மாறும்
தராதரங்கள் தகுதிகளும் மாறும்
தொழில் நுட்பங்களும் அறிவியலும் மாறும்
கலை கலாச்சாரங்களும் மாறும்
ஆசைகளும் அர்ப்பணிப்புக்களும் மாறும்
உறவுகளும் உரிமைகளும் கூட மாறும்
மாற்றம் காணும் புதிய ஆண்டை
மகுடம் சூடி மகிமைப் படுத்துவோம் !