வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

ஆகா ! வியப்பில் விழிகள்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 16.03.2023

அன்னைக்கு நிகராக இன்னொரு அன்னையாய்
அன்னை இல்லாக் குறையினை
இன்னை வரைக்கும் நிவர்த்தியாக்கி
அன்னையாகவே வாழும் எம் மூத்தஉறவு
அக்காவெனும் அற்புத உறவு !

விஞ்ஞானத் துறையினில் கல்வி கற்று
தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று
தாதியர் துறையில் பட்டத்தினையும் பெற்று
நாற்பது ஆண்டுகளைப் பணியினில் நிறைத்து
பிரதம தாதியாகிப் பதவியில் உயர்ந்து
தூயபணியினில் சேவையும் செய்கிறாரே !

வியப்பில் விழிகளும் விரிகிறதே
விரைவில் நொடிகளும் கரைகிறதே
தாயைப் போல இன்னொரு தாயாய்
தவமாய்க் கிடைத்த தனித்துவ உறவு
எம் ஐவரோடும் கூடிப்பிறந்த பந்தம்
அக்காவெனும் அன்புச் சொந்தம் !

தொலை தூரத்தில் இருந்தாலும்
தொலைபேசியில் நிதமும் கதைத்திடுவேன்
வாழ்வில் கிடைத்த பொக்கிசத்தை
வாழும் போதே வாழ்த்தி மகிழ்கிறேன் !