வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ மாதர் மாண்பு “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.03.2023

மாதவம் செய்திட்ட மாதரை
மனுக்குலத்தின் மாணிக்கங்களை
வீட்டின் மின்மினிகளை
நாட்டின் கலங்கரை விளக்குகளை
தியாகத்தின் சிகரங்களை
உறுதியின் உன்னதரை
உன்னதமாய் மதித்திடுவோம் !

தடைகள் பலதையும் தாண்டி
சமூகக் கட்டுக்களை உடைத்து
நிதர்சனங்களை நியாயமாக்கி
விமர்சனங்களை எதிர்கொண்டு
தன்னம்பிக்கையோடு போராடி
மென்மைக்குள் மேன்மையாகி
மேதினியில் சாதனையே மாதர் மாண்பு !

மாதர் சக்தி மாபெரும் சக்தி
மாதர் மாட்சி மண்ணிற்கு எழிற்சி
மாதரின்றி மன்னுலகில்லை
மாதரின்றி மனுக்குலமில்லை
மாதரின்றி எழிலுமில்லையே
மாண்புடை மாதரை மகத்துவமாக்கி
மாட்சியைப் போற்றுவோம் !