வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ நிமிர்வின் சுவடுகள் “…கவி…ரஜனி அன்ரன்(B.A) 02.03.2023

காலத்தை வென்று
காலநதியினில் கரைந்து
கோல விழிகளில் நிலைத்து
தலைமுறையினைக் காத்தவரை
தலைநிமிர வைத்தவரை
தலைக்கு மேலாக எமைச் சுமந்தோரை
நிமிர்வின் சுவட்டில் வாழ்ந்தவரை
நிமிசத் துளியாவது நினைத்திடுவோம் !

அரிய பட்டறிவுப் பாடத்தை தந்தவரை
அனுபவத்தின் அகராதிகளை
ஆற்றலை ஆளுமைகளை விதைத்தவரை
ஆணிவேராய் நின்றவரை
ஆழ்மனதில் நினைத்திடுவோம்
அவர் வாழ்ந்த சுவடுகளை
வழிகாட்டிய நெறிமுறைகளை
வரலாறாய் ஆக்கிடுவோம் !

உறுதுணையாயன பழுத்த உறவுகளை
உணர்வினில் கலந்து உறவாடிய மூத்தோரை
நிமிர்வின் சுவடுகளை
நித்திலத்தின் ஆணிவேர்களை
நித்தமுமாய் நினைத்திடுவோம்
நேர்வழியில் வாழ்ந்திடுவோம் !