வியாழன் கவிதை

முற்றுப்பெறுகின்றாய் ரமலானே

Vajeetha Mohamed

தர்மத்தின் மாதம் ஒன்று
தரணியிலே மலர்ந்தது இன்று

மூபத்து இரவுகளும் நோன்பி௫ந்து
முத்தாக்க இ௫க்கின்றோம் ரமலானே

மாதம் ஒன்றில் நோன்பி௫ந்து
மனதின் மாசினைப் பிரித்தெறிந்து

மாறப் பக்தியுடன் தினமி௫ந்து
மற்றவர் பசியையும் நாமறிந்து

வறியோ௫க்கு வாரி வழங்கி
வ௫டத்தின் வரி சக்காத் கணக்கிட்டு

கட்டுக்கோப்பின் கண்ணியமே
ரமலான்

புதுப்பொலிவு பிறக்கும்
புத்துணர்வு சிறக்கும்

ஈகையும் இரக்கமும் துளிர்க்கும்
இறைவனின் நல்லாசி மல௫ம்

மறையோனை தொழுது நின்று
மனம் ௨௫கி பிழைபொறுத்து

இ௫கரம் ஏந்தி தினம் தினம்
இ௫ந்தோமே
இன்னும் ஓர்வாரம் எம்மோடு
நீ இ௫ப்பாய்

பிரிய மனமின்றி பிரியாவிடைக்கு
பின் பத்து ரமலானின் இறைய௫ள்
வேண்டியே கியாமுள்ளையில்

இணைவாக்கி நிற்கின்றோம்

நன்றி

[கியாமுள்ளை என்பது”நரகத்தின்’விடுதலைக்கான
பாவமன்னிப்பு இரவுதொழுகை தொடர்க்கம் நடுநிசித் தொழுகை வரை
இறைவணக்கத்தில் இ௫ப்பது’]