வியாழன் கவிதை

மாலைக்காட்சி இல 14

அபி அபிஷா

சூரியனின் கதிர்கள் மறைகின்றன

வானம் செந்நிறமாக மாறுகிறது

இரை தேடிய பறவைகள் கூடு நோக்கிச் செல்கின்றன

மலர்ந்த பூக்களும் கூம்புகின்றன

வானத்தில் சந்திரனின் ஜாடை தெரிகின்றது

மேய சென்ற பசுக்கள் வீடு நோக்கி செல்கின்றன

வீடுகளில் மின் விளக்குகளின் ஒளி பெருகுகிறது

வேலைக்கு சென்றவர்கள் வீடு நோக்கி பயணிக்கின்றனர்

அபி அபிஷா