வியாழன் கவிதை

மழலைக்குள் மலர்கின்றாள்..

மழலைக்குள் மலர்கின்றாள்………

அவள் கிள்ளை மொழி அமிழ்து
கீதமென இசைந்தசையும் செழிப்பு
வித்தைகளை விளையாடும் விரல்கள்
வேருக்குள் ஒளி பாய்ச்சும் அழைப்பு

கால்களுக்குள் கரைந்தெழுதும் இழைவு
கனிவோடு அவள் பாச மொழிவு
அதட்டித்தான் அடி பணிய வைப்பாள்
அவள் செருக்கினிலே என் பாட்டி ஒளிர்வாள்

குழைந்தசையும் தமிழ் சொரியும் தேனை
அள்ளிப் பருகி விட அவளேந்தும் முத்தம்
எப்படித்தான் இத்தனை சொல் படித்தாள்
என ஏங்க கேள்விகளால் துளைப்பாள்

அழகியிவள் அருந்தவத்தின்சிற்பம்
முத்துப்பல்லழகில் முழு உலகும் அடிமை
பெருந்தவத்தின் பயனாகும் மழலை
நம் கைகளுக்குள் நிறைவதுவே அழகு

இரா விஜயகௌரி