வியாழன் கவிதை

மலர்ந்துவா! தைமகளே!

மலர்ந்துவா! தைமகளே!

புலர்கின்ற புத்தொளியே புனிதம் காக்க
மலர்கின்ற புத்தாண்டே மகிழ்வைத் தருக!
பிறக்கின்ற தைமகளும் புதுமை தரவே
நிறைக்கின்ற நல்மாதம் நித்திலத்தில் பொலிக!

தைமகளே வருக! வருக!
தரணியெங்கும் தமிழ் மணக்க வருக!
தாய்மண் பெருமை நிறைத்து வருக!
தண்மதியாய் ஒளிபரப்பி நிறைக!

மண்மலரே மணந்து வருக! வருக!
மாண்புகளை அள்ளி தருக! தருக!
கண்மலர்ந்து கனிகொடுக்கும் மரங்கள் நிறைக!
காசினியில் அன்பு மலர்க! ஆசை குறைக!
இன்பம் பெருக! இல்லம் செழிக்க!
மலர்ந்து வா தைமகளே!
புலர்ந்து பொலிக! பூமகளே! https://youtu.be/AONmg2srkgs?si=G3fEaem66rKDhT32