வியாழன் கவிதை

மலரும்அமைதி இல(127) 4/4/24

நேவிஸ் பிலிப்

சஞ்சலம் கவலையென
நித்தமும ஏங்கும் மனம்
மொத்தமாய் வேண்டுவது
அமைதி மன அமைதி

மனதில் அமைதி வேண்டின்
அன்பு எனும் தீபமேற்றி
அகலொளியின் வெம்மையில்
மனமுருக ஆங்கே

தன்னலம் கரைந்தோட
பொதுநலம் சுரக்க
அங்கே மனிதம் மலர்ந்திடுமே
இருந்திடினும்

தேவைகளை விரல் நுனியால்
தேர்ந்தெடுத்து நிறைவு செய்து
சொகுசான வாழ்வு கொண்டு
மனிதன் வாழும் வரை

உணவுடை உறையுளென
ஏங்கும் மனிதர் உள்ளவரை
உலகில் மலர்ந்திடுமோ
அமைதி மன அமைதி
நன்றி வணக்கம்.