சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரள்

சாந்தி

அமைதியே சாந்தி
அனைத்து நலமும்
அண்டிட அமைய, சாந்தி
சமைத்திட நீயும் சிந்தி
சங்கடமின்றி நல்லதை ஏந்தி.
புதைத்து தீயதை புறத்தேஓட்டி
உதைத்து வாழ்வோருக்கு உறவாமோ சாந்தி
இதயத்தால் அன்பை
இறைத்து அணைத்து
விதைப்போர் கரங்களில்
விளையும் சாந்தி
சித்தம் சிறந்தாலே
சேர்ந்தணையும் சாந்தி
யுத்தம் ஓய்ந்தாவே
நித்தம் நிலை யாகும்
அன்பை வெளிக்கொணர்ந்து
ஆலிங்கணம் செய்யும்
பண்பை சுரக்க
பலமாய் மனத். உதிக்கும்
மற்றவர் வலிக்கு
மருந்திடத் தொற்றும்
சென்றவருக்கு கடன்செய்ய என்றெவரோரும் அன்பாய். இணங்கி உறவாட
அங்கு உதிக்கும் மன அமைதி
அதுதானே சாந்தி ஆம் அதுதான் சாந்தி