சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன

பாட்டி

வெள்ளை நிறமேனி
வெள்ளாடை பூண்ட கூனி
வெற்றிலைச் சிவப்பேற்றிச் சிரித்தாளே
வெள்ளை யுள்ளம் காட்டி

பொல்லை யூன்றி நடந்தபோதும் போகாது நின்றதே அவள்திடம்
பேசுவாய்க்களும் அடங்கும்விதம்

கொள்ளை யழகு கொண்ட வளாமவள் இளமையில்
கொடுத்தானாம் இறைவனும் இனிய துணைநலம்
துள்ளல் நடைநடந்து பின்கொய்ய மசைய
இடைக்கிழ்
நெகிழ்ந்து பின்னலாடப்
பாட்டி நடப்பாளாம்
துள்ளும் உள்ளத்தை அடக்கியே அன்னியரும் கடப்பாராம்
அத்துமீறின் கொட்டுவாளாம் காரத்தைப் பாட்டி
எள்ளும் வகையில்லா ஏற்றம் கொண்ட வாழ்வே
அவளது
என்முகம் பார்க்கில் தெரிவாளாம் பாட்டி

நாற்சார் முற்றத்திலே தன்னை நடுவிருத்தி
சுற்றிவரக் காற்றெட்ட
எம்மை யமர்த்திப்
பற்றுடனே பாட்டி யளித்தாளே கூழலப்பம்
நேற்றுப் போலுள்ளதே நிகழ்ந்த யாவும்

சூடுதாங்கி விரலிட்டு இறால்நண்டு பலாக்கொட்டை கூழிலெடுத்துச் சுவைத்த காலமும் வருமோ
கூடாயி ருந்துகாத்து தகர்ந்து போன
நாற்சார் வீடுமெங்கும் முளைக்குமோ மீண்டும்

மனோகரி ஜெகதீஸ்வரன்